Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது”… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்கு ஆளான பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் எதிர்பார்த்ததைவிட தீவிரமானதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த சூழலில் சரிவர பணியாற்றாத அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். அனுராதாபுரம் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிபர் அணில் விக்ரமசிங் சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது எனவும் வேலை பார்க்காத அரசு ஊழியர்களுக்கு இலவசமாக உணவளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்கு செல்லலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்திருப்பதாகவும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி விவசாய புரட்சி தொடங்கும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

Categories

Tech |