மத்திய அரசு யோகா குறித்து பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து 2015 ஆம் வருடத்திலிருந்து யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் யோகா பிரேக் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஐந்து நிமிட யோகா இடைவெளியை பின்பற்றும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது.
அதன்படி கடந்த 2020ஆம் வருடம் முதல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 இடங்களில் யோகா இடைவெளி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய ஊழியர்களுக்கு ஐந்து நிமிட யோகா இடைவெளியை வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் ஊழியர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி பணி அழுத்தத்தை குறைத்து திறனை அதிகப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சாதாரண மக்களும் கூட தங்களுடைய கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.