டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அதனால் வேலை பாதிப்பு ஏற்படாமல் அதே சமயம் ஊழியர்களும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது காற்று மாசு குறைவாக இருந்தது.
எனவே மீண்டும் டெல்லி அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுமான பணிகளுக்கு தடை, பொதுப் பள்ளிகளை மூடுதல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்ற பல வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக காற்று மாசு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.