புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாத அரசு ஊழியர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு வருகின்ற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.