Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே!…. இன்று ( பிப்.7 ) முதல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் சில கட்டுப்பாடுகள் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் என்று ஜனவரி 31-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மத்திய அரசு இந்த நடைமுறையை வருகின்ற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த ஜிதேந்திர சிங், “தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மேலும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கட்டாயம் அலுவலகங்களுக்கு வர வேண்டும். அதேபோல் முகக்கவசம் அணிந்து ஊழியர்கள் அலுவலகங்களில் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஊழியர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |