இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வரிசையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100 சதவிகித ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் எனவும் துறைத் தலைவர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (15.22022) முதல் அமல்படுத்தப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.