Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு….  ஹேப்பி நியூஸ் ரெடி பண்ணுமா தமிழக அரசு…? 

அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைத்தால், ஊதிய உயர்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்க தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் புதிய ஒப்பந்தத்தைபோட  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் சொல்லமுடியாத துயரத்தில் இருந்து வரும் நிலையில் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினையை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை சிறப்பாக நடத்துவோம் என்று கூறியுள்ள தமிழக அரசு அதற்கான பணிகளைத் தீவிரமாக செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பேருந்துகள் பழைய பேருந்து. இந்த பேருந்துகளை ஓட்டுவதற்கு ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரிப்பதோடு மக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய சூழல் உருவாகின்றது. இதன்காரணமாக காலாவதியான பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மேலும் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய பிரச்சினைகளாக காப்பீடு தொகை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இந்த தொகை தொழிலாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு, நிலுவையில் உள்ள பேட்டா தொகை 27 கோடி ரூபாயையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |