Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் – நீதிபதிகள்

அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகளை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சேர்ந்த திரு. ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட வேண்டும் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் சாதி சார்ந்த சங்கங்களையும் மதம் சார்ந்த சங்கங்களையும் வைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுதாரர் மற்றும் மனுதாரருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும் விசாரணை செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories

Tech |