Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு…. பஞ்சாப் அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால், தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி கூட எடுத்துக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்றும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசித் செலுத்தி கொள்ளாத ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |