ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான ரஸ்ஸல் கைமா,அபுதாபி, சார்ஜ், துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. இதற்கிடையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பணி நேரம் என்று துபாய் அரசு அறிவித்தது.
அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2.5 நாட்கள் விடுமுறை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. என்று ஷார்ஜா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற ஜனவரி 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு வணிக சூழல் மற்றும் பொருளாதார சந்தையை ஆதரிக்கும் ன்று அரசு தெரிவித்துள்ளது.