Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்களின் ஈட்டிய சரண் விடுப்பு ரத்து செய்து விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி அதிமுக கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஈட்டிய சரன் விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால், அதனை ரத்து செய்துவிட்டு அந்த விடுப்பு களை அரசு ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |