மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2009-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை ஊழியர்களுக்கும் கூடுதல் படித்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் படித்தொகை வழங்கப்பட்டது. அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, சீக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்திந்திய ஊழியர்களுக்கு சம்பளத்திலிருந்து 25% சிறப்பு படியாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு படி தொகையை மத்திய அரசு நிறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories