9 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முடிவுசெய்தா.ர் இதற்காக தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முடிவுகள் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைய முதலமைச்சர் பரிந்துரை செய்தார் .இதன்மூலம் 9 லட்சத்து 36 ஆயிரத்து 976 ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊதிய உயர்வு வழங்கும் என அறிவித்துள்ளார்.