Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன்…. அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகையை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் 2 குழந்தைகளின் கல்விக்கு அரசிடமிருந்து உதவித்தொகை பெற முடியும். ஒரு குழந்தைக்கு ரூ.2250 வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.4,500 சம்பளத்துடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊழியர்களால் கிளைம் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் பள்ளிகள் மூடப் பட்டதால் இதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் கல்வி தொகைக்கு கிளைம் செய்யாத ஊழியர்கள் தற்போது செய்து கொள்ளலாம். இதன் மூலம் 25 லட்சம் ஊழியர்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்கு ஆவணம் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை. இதற்கு முன்னதாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |