நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை.
அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகை நோய்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலை வாசிகளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஆலோசிக்கப்பட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 2 கட்டமாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு 31 சதவீதம் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு 2021- ஜூலை மாதம் முதல் தேதியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டையொட்டி மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியானது. இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பாக சம்பள உயர்வு குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு பிட்மெண்ட் ஃபேக்டர் அதிகரிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் 6,000-ல் இருந்து அதிகபட்சம் 18,000-ஆக வழங்கப்பட்டது. மத்திய அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்ந்தால் குறைந்தபட்ச ஊதியம் 18,000-லிருந்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.