Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. அரசு புதிய அதிரடி…!!!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் .அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 11 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெறுவார்கள். ஜூலை மாதம் இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |