ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவு செய்ய இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது குறித்து முதல்வர் ஹேமன் சோரன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28% அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 31% வழங்கப்படும். இந்த அகவிலைப் பட்டியல் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அடிப்படையாகக்கொண்ட கணக்கிடப்பட்டு சம்பளத்தில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாயத்து மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் ஊழியர்கள் நியமனம் குறித்து 14 விதிமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து பெண்கள் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் பரிந்துரையை ஏற்று யுனிவர்சல் பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஓய்வு ஊதியம் பெற முடியும். அதனைப்போலவே ஓய்வூதியம் பெறக் கூடியவர் அல்லது அவரின் அடுத்த குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்தும் வகையில் வருமானம் பெறுபவராக இருந்தால் அல்லது மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்ற கூடிய நபராக இருந்தால் ஓய்வூதியம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் மத்திய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் தொகை அளிக்கப்படும். இது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஆண்டிற்கு ரூ.9,488 கோடி செலவு ஏற்படும்.