அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரையில், அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் உடன் நேரம் செலவிடும் வகையில் இரண்டு சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இது வழக்கமாக விடுப்பு எடுக்கப்பதற்கான எண்ணிக்கையில் இருந்து குறைக்கப்படாது எனக் கூறினார். இந்த இரண்டு நாட்களும் வார விடுமுறை உடன் சேர்த்து தொடர்ந்து நான்கு நாட்கள் கிடைக்கும் வகையில் அளிக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்தார். இதனை ஜனவரி 2022 முதல் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதன்படி, மாநில அரசு அறிவித்திருந்த சிறப்பு விடுப்பு நேற்றைய தினம் (ஜனவரி 6, வியாழன்) தொடங்கியது.சலுகையை பெறுவதற்கு அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் உடன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை மேலதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “அனைவரும் நாளுக்கு நாள் குடும்ப மற்றும் சமூக பிணைப்பு வலுவிழக்கும் வகையில் நடந்து வருகிறோம். குடும்பம் உறவினர்கள்
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நாம் தவறவிட்டு விடக்கூடாது. இதனை மீட்டு கொண்டு வரும் வகையில் அசாம் மாநில அரசு இத்தகைய சிறப்பு வாய்ந்த நடவடிக்கையை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதன்படி, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் பெற்றோர்களிடம் நேரம் செலவிடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறது.