Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம செக்… வெளியான கிடுக்கிப்பிடி உத்தரவு…!!!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான உத்தரவு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இக்கூட்டத்திற்கு பிறகு,  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்களிடம் பேசியுள்ளதாவது, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மை மற்றும் தூய்மை மிகவும் முக்கியம். மேலும் அதன் அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்களது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் அதே போல ஐ.ஏ.எஸ். மற்றும் பி.சி.எஸ். (பிராந்திய சிவில் சர்வீஸ்) உள்ளிட்ட  அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். மேலும் பொது மக்கள் அறியும் வகையில் அவை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், அரசு பணிகளில் தங்கள் குடும்பத்தினர் தலையிடாது இருப்பதை, அனைத்து அமைச்சர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் நமது நடத்தையால் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். மேலும் அரசு திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில், தரமாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |