Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3% உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா சாதாரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் DA 11 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் தங்களது அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இந்த உயர்வானது ஜூலை மாதம் 1ம் தேதியை முன் தேதியிட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள். மேலும் புதுச்சேரியில் பணிபுரியும் தற்காலிக அரசு பணியாளர்கள் இதுவரை 7 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். அவர்களுக்கு 15 ஆயிரமாக ஊதிய உயர்வு அளித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |