Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் சர்ப்ரைஸ்…. நீங்களே பாருங்க….!!!

ஆந்திரப் பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் கபீர் சர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்தக் கமிட்டியில் 11-வது ஊதிய திருத்த ஆணையம் அளித்த அறிக்கை விரிவாக ஆராய்ந்ததில் உரிய திருத்தம் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 14.29% பிட்மெண்ட் படியை உயர்த்துவதற்கு பரிந்துரை அளித்துள்ளது. மேலும் 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய சம்பள முறையை அமலுக்கு கொண்டுவர உள்ளது என்றும், இதனால் மாநில அரசுக்கு கூடுதலாக 8,000 கோடி ரூபாய் முதல் 10,000 கோடி ரூபாய் வரை அதிக நிதிச்சுமை ஏற்படும் என்றும் தெரிகிறது.

ஊதிய திருத்தம் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர், அந்த அறிக்கையை இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தலைமைச் செயலாளர் கபீர் சர்மா வழங்கினார். இது தொடர்பாக 3 நாட்களுக்குள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள உயர்வு பற்றி எப்போதும் வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |