மத்திய அரசு பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிடிஜி தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசால் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிடிஜி மானியத்திற்கான வரம்பை நீக்குவதாக முடிவு அரசு செய்துள்ளது. சிடிஜி என்பது பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர் வேறு ஊருக்கு செல்ல ,அவர்களுக்கு தேவையான நிதியை அரசு வழங்குவது ஆகும். அதாவது அரசு ஊழியர்கள் வேலை செய்த ஊரில் இருந்து வேறு ஏதாவது 20 கிலோமீட்டருக்குள் உள்ள ஊர்களில் தங்குவதற்கு அவர்களுக்கு நிதி வழங்கப்படும்.
அந்த தொகை சிடிஜி தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் சிடிஜி அரசு ஊழியர்களில் சம்பளத்திலிருந்து கணக்கிடப்படும். அதாவது அடிப்படை சம்பளத்தில் 80% ஆகும். இந்த சிடிஜி தொகை, அரசு ஊழியர்கள் 20 கிலோமீட்டர் வரம்புக்கு மேல் வேறு ஊர்களில் செட்டிலானால் முழு தொகை கிடைக்கும். ஆனால் அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் முழுவதும் சிடிஜியாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, அரசு ஊழியர்கள் நிம்மதி அடையும் வகையில் 20 கிலோமீட்டருக்குள் செட்டிலாகும் அரசு ஊழியர்களுக்கான சிடிஜி வரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர் 20 கிலோமீட்டருக்குள் செட்டிலானாலும் முழு சிடிஜி வழங்கப்படும். இதற்கான ஆனையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.