இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி இதற்கு முன்பு ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த நிலையில் தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.