ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பழைய உறுதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதி உடையவர்கள். அதன்படி 2022 மார்ச் 31க்குள் முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விதியின்படி ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டபூர்வமாக அமல்படுத்தியுள்ளது.
அதன்பிறகு தேசிய பென்ஷன் திட்டத்துக்கான ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2004 ஏப்ரல் 1 க்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளனர். தற்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 20% பிடிப்பதை நிறுத்தியுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ரூ.39 ஆயிரம் கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.