Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. ஜூலை 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் உலக நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்தன. அந்தவகையில் இந்தியாவும் கொரோனா பாதிப்பின் காரணமாக பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக அரசு சில கடினமான முடிவை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குபவர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. இது பென்சன் வாங்குபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக நிதி நெருக்கடி நிலவியதால் அகவிலைப்படி நிறுத்திவைப்பு நீடித்து வந்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதால் ஜூலை 1ம் தேதி முதல் முழு அகவிலைப்படி நிலுவை பணம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், பென்சர்களுக்கும்  கிடைக்கும் என்று நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துமத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குபவர்களுக்கு 3 தவணை அகவிலைப்படி நிலுவையில் இருக்கிறது. 2020 ஜனவரி 1 முதல் தவணை, 2010 ஜூலை 1 இரண்டாவது தவணை மற்றும் 2021 ஜனவரி 1 மூன்றாவது தவணை என்று மூன்று தவணைகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |