மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு ஜனவரி 1 2021 வரையிலான மூன்று கூடுதல் தவளைகளும் இதில் அடங்கும். இவ்வாறு நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினங்கள் துறை தெரிவித்துள்ளது.