தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு பற்றி எதுவும் வெளியிடவில்லை. இதையடுத்து கொரோனா காலத்தில் பொதுமுடக்கத்தின் காரணமாக சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் இருந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தாமாக தலைவர் ஜிகே வாசன் ஆகியோர்கள் 25% போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது அரசு இது குறித்து முடிவு எடுத்ததாக தெரியவில்லை என்று கூறுகின்றனர்.
இதையடுத்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உள்ள ஸ்டாலினதீபாவளி போனஸ் வழங்கப்படுவாரா என்றும் நிதி நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு வழங்கிய போனஸ் முறையும் வழங்கப்படுமா என்று ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு சலுகை கிடைக்கப் பெறும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் நிதி நிலைமை காரணம் காட்டி இதுவரையும் அகவிலைபட்டியலை இதுவரை வெளியிடப்படாததால் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.