Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது. கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, இன்றைக்கு உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் முதலமைச்சருடன் பேசி சூழலுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |