Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. கோரிக்கை நிறைவேற்றப்படுமா…? மத்திய அரசு முக்கிய முடிவு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய செயலவை உள்ளடக்கிய பல்வேறு மத்திய அமைச்சர்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக பதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மத்திய அரசு பணி  இடங்களில் பிரிவு துணைச் செயலாளர் துணைச் செயலர் இயக்குனர் மற்றும் இணை செயலர் தளத்தில் 6,210 அதிகாரிகள் உள்ளதாகவும் மேலும் இந்த மொத்த எண்ணிக்கையில் 1,839 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மத்திய பணியாளர் மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான  இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அலுவலகம் முன்பு பதவி உயர்வு கோரி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளில் ஒருவர் கூறியபோது, போராட்டத்தில் 15,000  மேற்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முன் அனுமதி இல்லாததால் அமைச்சரின் எங்களை சந்திக்க வில்லை. இது குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பதவி உயர்வு தொடர்பான எங்களது கோரிக்கைகள் வரும் மார்ச் 10ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படபடும் எனவும் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கூறினார் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |