Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.500… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு உடன் சேர்த்து 2,500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் 2000 ரூபாய் மாத ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வு பெற்ற சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |