Categories
மாநில செய்திகள்

மகப்பேறு கால விடுப்பு…. 12 மாதங்களாக உயர்த்தப்படும் – நிதியமைச்சர்…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார்.

இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |