Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. தெறிக்கவிட்ட முக.ஸ்டாலின் …!!

தமிழகத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் படி 3 ஆண்டு காலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படுவதன் மூலம் அரசு நிர்வாகம் மேம்படும் என்றும், பிரச்சனைகள் உடனுக்குடன் களையப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அனைத்து தகவல் பரிமாற்றங்களும் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |