தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவிலோ அல்லது ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில், கொரோனா காரணமாக 59 ஆக உயர்த்தியது. தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக அரசு இந்த முடிவை செய்துள்ளது. இந்தச் செய்தி அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தியாக இருக்கும்.