பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது..
தமிழக முதல்வராக மு..க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. இந்த மாதமே இந்த திட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இதற்காக அரசு ஊழியர்களிடமிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..