Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள்…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆன காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் நேற்று நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள லால்பக் மைதானத்தில், முதலமைச்சர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில் மாநில அரசு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. அதன்பின் ஓய்வூதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும். குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறு வணிக நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் சட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தும்.

தனியார் நிலத்திலுள்ள முறைகேடு கட்டுமானங்கள் அனைத்தும் பொது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறைப்படுத்தப்படும். வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், போக்குவரத்துத் துறையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் அடிப்படையில், மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து வசதி மையங்கள் திறக்கப்படும். அதனை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுவப்படும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |