Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இனி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நிறைவுக்கு பிறகு மாதம்தோறும் ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2022ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த முறை பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் c மற்றும் dபிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டது. அதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன் பெற்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசை போன்ற தற்போது அரசு ஊழியர்களின் திருமணமாகாத பெண்கள், விதவை, விவாகரத்தான பெண்கள், விதவை மகள் ஆகியோர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்க பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து, அரசு ஊழியர்களின் திருமணமாகாத பெண்கள், விதவை, விவாகரத்தான பெண்கள், விதவை மகள் ஆகியோர்கள் வாழ்நாள் முழுவதும் பயனடையும் வகையில் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது என முடிவு செய்து அதற்கான அதிகாரபூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக மேற்கண்ட வகையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயன் அடைவர் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |