Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பிப்ரவரி 27ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வருகிற 27-ஆம் தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளதால், அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |