இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி அசாதுதீன் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமா என்று கேள்வி எழுப்பினார்.
அதோடு தற்போது 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் இல்லை என்று கூறிவிட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசுகள் தேசிய பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தேசிய பென்ஷன் நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு தேசிய பென்ஷன் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது என்றும் கூறியுள்ளது.