Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்றின்  காரணமாக பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து  அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 18 மாத காலங்களில் நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா  பரவல் குறைய தொடங்கியதை  அடுத்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை பெற்றுவருகின்றனர். இந்த ஆண்டு 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவீத அகவிலைப்படியை பெறுவார்கள். மேலும் பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தாவது, தற்போது அரசு ஊழியர்கள் 24.50% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தற்போது 2.75% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி தற்போது கர்நாடக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 27.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் இதனை வருகிற ஜனவரி 1ம் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,447 கோடி செலவினம் ஏற்படும் என்று கணக்கிடூ செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |