அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பென்சன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது .அதையடுத்து தற்போது வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருவேளை பென்சன் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால் இன்னும் நிறைய பேர் இந்த அமைப்புக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அதேநேரம் இந்த நடவடிக்கையால் அரசுக்கு 6750 கோடி கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கான பென்சன் உயர்த்தப்பட வேண்டும் என்பதோடு ஊழியர்கள் பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் மத்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆலோசனை குழு பிரதமர் மோடிக்கு முன்மொழிந்து உள்ளது.