Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 270 நாட்கள் சிறப்பு விடுப்பு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தினாலும் அந்த குழந்தையை பராமரிக்க 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.அது மட்டுமல்லாமல் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அந்த குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்ததை போல மாற்று கருவறை தாய் மூலமாக பெறும் குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மாற்று கருவறை தாய் பெரும் குழந்தைகளை பராமரிக்க பெண் அரசு ஊழியர்கள் 270 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. குழந்தை பெறப்பட்ட மருத்துவரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் எனவும் இந்த விடுப்பு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெண் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |