Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய உயர்வு வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அதற்காக பல மாநிலங்களில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எந்த மாநில அரசும் முன் வரவில்லை.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-இலிருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் முதல் அமலுக்கு வருவதாகவும், அதனால் ஒப்பந்த ஊழியர்கள் வெளியில் இருந்து பணியாற்றி வரும் பயன்பெறுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |