அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8 மாத நிலுவை தொகை 7-வது ஊதியக்குழு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை மார்ச் 30-ம் தேதிக்குள் வழங்குமாறு நிதித்துறை உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் தற்போது ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 180 கோடி மதிப்பிலான நிலுவை தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.