இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் வருடம் பிறப்பதற்கு முன்பாகவே அந்த வருடத்திற்கான விடுமுறை மற்றும் வேலை நாட்களை அறிவித்து விடும். ஆனால் அதில் அரசு ஊழியர்களுக்கு என விடுமுறைகள் எதுவும் அழிக்கப்படாது. பொதுவாகவே அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயலாற்றுவது அரசு ஊழியர்கள் தான். அதனால் அரசு தனது ஊழியர்களுக்காக பல சிறப்பு திட்டங்களையும் சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறது.
திரிபுரா மாநில அரசு துர்கா பூஜையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான ஒன்பது நாள் விடுமுறை அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்குகின்றது. இதற்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு துர்கா பூஜை கொண்டாட்டத்திற்காக நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது