நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற தடுப்பூசி கட்டாயம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.