தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வரின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்ட நபர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை. பதவி, ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன் என அனைத்தையும் பாதிக்க செய்யும் வகையில் துரோகம் இழைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.