நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பதை ஆரோக்கிய சேது செயலியில் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.