Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்கள்… “இந்த நாளில் சைக்கிளில் வரனும்”… கலெக்டர் அறிவிப்பு.!!

அரசு ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன்கிழமை சைக்கிளில் வரவேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதில்  காற்று மாசுபாட்டினால் சுற்று சுழல் பாதிப்படைந்து உலக அளவில் வருடத்திற்க்கு  20 லட்சம் பேர்  உயிரிழந்து வருகின்றனர். காற்று மாசுபாட்டில் 72 சதவீதம் வாகனம் மாசு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனக்சைடு, ‌நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வற்றால் மனிதர்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த சுகாதார கேடினால் தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், புற்றுநோய் ஆகியவை மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முதல் முயற்சியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எல்லா பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற  அலுவலக வாரம் பயண நாள் புதன்கிழமை என கடைபிடிக்கப்பட்டு வாரந்தோறும் புதன்கிழமை அனைத்து பணியாளர்களும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில் அல்லது நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் அலுவலகத்திற்கு வருகின்றார்கள்.

இதை போல் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் மாசற்ற  அலுவலக வாரத்தை  கடை பிடிக்க வேண்டும் இது மட்டுமல்லாது அரசு அலுவலகத்திருக்கு வரும் பார்வையாளர்களும் இதை கடைப்பிடித்து சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும்.  இந்த முயற்சி மாசுக் கட்டுப் பாட்டை குறைப்பதற்கு ஒரு சிறு வழி ஆகும்.

Categories

Tech |