அரசு ஊழியர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் காற்று மாசுபடுதலை தவிர்ப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து திட்டமும் அடங்கும். இத்திட்டத்தின் மூலம் மகளிர் அதிக பயன் பெற்று வருகின்றன. அந்த வகையில் மக்களின் உடல் நலனிலும் அதிக அக்கறை கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் மக்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அலுவலகத்திற்கு விரைவில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பைக் அல்லது பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர்.
எனவே மக்கள் உபயோகிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இதனால் அதிக அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில்தான் அதிக அளவு காற்று மாசுபடுவதாக அறிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர் ஒரு புதுவிதமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது காற்று மாசுபடுதலை தவிர்க்கும் நோக்கில் வாரத்தில் ஒருநாள் மட்டும், அனைத்து புதன்கிழமையும் அரசு ஊழியர்கள் பேருந்தில் அல்லது நடந்தே அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த அருமையான திட்டத்திற்கு அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நச்சுத்தன்மை கொண்ட காற்றையை சுவாசிப்பதால் உயிரிழக்கின்றனர் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.