பணி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு ஊழியர்களை அழைக்கக் கூடாது என்ற புதிய திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மையாகும். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் புதிய சட்டத்தை தனது அரசு ஊழியர்களுக்காக சில வாரங்களுக்கு முன்பு உருவாக்கியுள்ளது.
அதில் அரசு ஊழியர்களை பணி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அழைக்க கூடாது என்பதுதான் அந்தப் புதிய சட்டமாகும். ரைட்டு டிஸ்கனெக்ட் என்னும் இந்த திட்டத்தின்படி பணி நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழைக்கக்கூடாது. மேலும் இந்த திட்டத்தை தவறான முறையில் ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது, எனவும் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் அரசு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.